நமது உடலை நோய் அணுகுமுன் பாதுகாப்பதட்க்கும் பொருத்தமான உணவை சரியான அளவில் எடுப்பதடக்குமுரிய அவசியத்தை சுமார் 2000 ம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவ பெருந்தகை தமது திருக்குறளில் பசும் தமிழில் பா வடிவில் கூறி வைத்திருப்பது என்பது தமிழ் மொழியின் மருத்துவ பங்களிப்பானது எவ்வளவு ஆழமானது என்பதனை உணரமுடிகின்றது.
இன்று நாம் அலோபதி மருந்துகளை எடுத்து பயன்படுத்துகிறோம். சித்த மருத்துவம் என்பது பழந் தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்தரால் கூறப்படும் மருத்துவ முறை. இது சித்த மருத்துவப் பள்ளிகளில் இன்றும் கற்பிக்கப்படும் முறை. இது அலோபதி முறையிலும் வேறுபடுகிறது. அலோபதி மருத்துவம் கிரேக்கத்தில் இருந்து வருகிறது, திருவள்ளுவர் வாழ்ந்த சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அறிந்திருக்கவில்லை. அன்றைய பழந்திரவிட நாட்டில் சித்த மருத்துவமே பயன்படுத்தப்பட்டது.
சித்த வைத்தியதின் படி மனிதனுக்கு ஏட்படும் வியாதிகளை சரீர மற்றும் மன நோய் என இருவகைப்படுத்தி இருக்கின்றனர். இதில் வாதம், பித்தம், கபம் என்பன சரீர தோஷம் எனவும் தாமசம், ராஜசம் என்பன மனதை ஆள்பவை என்றும் கூறப்படுகின்றது. மூளை, நரம்புத்தொகுதியின் இயக்கத்திட்க்கு வாதமும் உணவு சமிபாடு, உடல் வெப்பம், இரத்தம், சுரப்புகளுக்கு பித்தமும் இருதய இயக்கம் மற்றும் சுரப்பிகளின் இயக்கத்திட்கு கபமும் குறிப்பிட்ட அளவில் அவசியமாகின்றன. பித்தமும் கபமும் இரைப்பையிலும் வாதம் பெருங்குடல் பகுதியிலும் உட்பத்தியாகின்றன. இவ்வாறு உடலின் உணவு தொகுதியில் உருவாகின்ற வாதம்,பித்தம் மற்றும் கபம், நாம் தினமும் உண்ணும் உணவுகளுடன் சேர்ந்து அகத்துறிஞ்சப்பட்டு நமது உடலின் சகல அங்கங்களும் கொண்டு செல்லப்படுகின்றன. மேட்கூறப்பட்டவாறு விவித அளவுகளில் உடல்உறுப்புகளில் செல்கின்ற கபம்,பித்தம், வாதம் ஆகியவை நோய்க்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன.
திருவள்ளுவரும் இதனை புலப்படுத்திடும் வகையில்
"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வழிமுதலா எண்ணிய மூன்று"
நூலோர் என கூறுவது, நூட்கள் பல கற்றவர்கள் என்று கருதப்படும் வைத்தியர்களையும், அவர்கள் பல நூல்களை கற்று அறிந்திருக்கவேண்டும். நூல் என்பது சாதாரண புத்தகங்களை குறிப்பிடாது. நாம் இன்றும் பேச்சு வழக்கில் குறை நிறைகளை பார்த்து சரியானதை சொல்லும் பொழுது "நூல் பிடித்து பாகின்றார்" என்று கூறுகிறோம். உதாரணமாக: சுவர் ஒன்றினை கட்டி எழுப்பும் போது நேராக இருக்கின்றதா என்பதை தெளிவுபடுத்த நூல் பிடித்து பார்க்கின்றோம். ஆகவே நூல் என்பது எம்மை சரியாக நேராக நேர்மையாக சிந்தித்து செயல்பட வைப்பது. நூலோர் எனப்படும் மருத்துவர்கள் நோயாளிகளின் உடலின் வாத பித்த கப குறை நீக்கி சரிபார்த்து வைத்தியம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
"உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச்செயல் "
மருத்துவர்கள் பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் செய்கின்ற பொழுது அப்பிணியாளியின் வயது, நிறை, நோயின் தன்மை, மற்றும் எத்தனை காலம் மருந்தின் பாவனை போன்றவற்றை கருத்தில் கொண்டு வைத்தியம் செய்திடல் வேண்டும். இது தற்போதைய நவீன காலத்திட்க்கும் பொருந்தும். இதனையே திருவள்ளுவர்; நோயுற்றவனின் வயது, நிறையளவும், நோயின் தன்மையளவும் எவ்வளவு காலம், எந்நேரம் என்பவற்றை கருத்தில் கொண்டு கற்றவர்கள் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறார்.
"உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று
அப்பால்நாட் கூற்றே மருந்து "
ஒரு நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட மருந்தினை கொடுப்பதனால் மட்டும் சுகமடைவதில்லை. அதிகமான சந்தர்ப்பங்களில் வியாதி குணமடைவதுமில்லை. இறப்பு கூட நிகழலாம். இதன் காரணமாகவே திருவள்ளுவனும் வைத்தியத்தின் உச்ச பயனை பெற அதன் நான்கு பிரிவுகளும் ஒன்றுசேர்ந்து இயங்க வேண்டும் என்கிறான். அவை பின்வருமாறு, பிணியாளி, மருத்துவன், சரியான மருந்து, பல்வேறுபட்ட இடங்களுக்கு சென்று மூலிகைகளை கொண்டுவந்து வைத்தியனுக்கு உதவுபவன் என்பனவாகும்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல் "
இந்நவீன உலகில் மனிதனுக்கு ஏட்படும் நோய்கள் பற்றி ஆராய்ந்து அது பிட்க்காலத்தில் அதனை சரிசெய்வதட்க்கு வருமுன் காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்கின்றனர். உதாரணமாக, கோவிட் 19 நோயை தடுப்பதட்க்காக அந்நோய் பற்றி விரிவாக ஆராய்ந்து அதட்க்கான வருமுன் காப்பு நடவடிக்கைகளை மேட்கொள்கின்றனர். இதனையே வள்ளுவன் 2000 ம் வருடங்களுக்கு முன்னர், நோய் இன்னதென்று ஆராய்ந்து, அது தொற்றுவதட்குரிய காரணிகள் இன்னவென்று ஆராய்ந்து அதனை தனிப்பதட்குரிய வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த வாய்ப்புகளை கிடைக்க செய்வதன் மூலம் நோய் வரு முன் தடுக்கலாம் என்கிறார்.
.png)

.png)
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக