ஒரு குழந்தை தன் தாயின் கருவில் இருந்து பிறந்தது முதல் 05 வயது வரும் வரை பெற்றோர் தனது குழந்தையின் உணவு பழக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அதாவது இவ்வைந்து வருட காலப்பகுதியில் தான் பிள்ளையினுடைய உடல், மூளை வளர்ச்சி இடம்பெறுகிறது. ஆதலால் இக்காலப்பகுதியில் பிள்ளைக்கு வழங்கப்படக்கூடிய உணவின் தன்மை பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலமே ஆரோக்கியமான புத்திசாலியான குழந்தைகளாக அவர்களால் வளரமுடியும். அது மட்டுமல்லாது தனது பிள்ளையின் வயதிட்டக்கு ஏற்ற வளர்ச்சியை அடைந்திருக்கின்றதா என ஆராய்ந்து தெளிவு படுத்தி கொள்ளுதலும் அவசியம்.
பிள்ளையின் முதல் 180 நாட்கள் தாய்ப்பாலே நிறைஉணவாக காணப்படுவதோடு பிள்ளையினுடைய போசாக்கு மட்டத்தினை பூரண படுத்துகின்றது. இக்காலப்பகுதியில் வேறு குறை நிரப்பு ஆகாரங்கள் கொடுப்பது அவசியமற்றது. தாய்ப்பாலேபிள்ளையின் நோய் எதிர்ப்பு சக்தியை நிறைக்கிறது. குழந்தையானது ஆறு தடைவைகள் நாளொன்றுக்கு சிறுநீர் கழிக்குமாயின், அது சரியான அளவில் தாய்ப்பாலை உள்ளெடுக்கிறது எனலாம்.இவ்வாறு மாத காலப்பகுதியில் பிள்ளையின் வளர்ச்சி பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
குழந்தையின் முதல் ஆறு மாத்திட்கு பின்னர் தாய்ப்பாலுடன் குறைநிரப்பு உணவுகள் வழங்க ஆரம்பிக்க வேண்டும். அத்தோடு தாய்ப்பாலானது முதல் இரண்டு வருடங்களுக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அத்தோடு குழந்தையின் அதிகரித்த போசாக்கு தேவையானது குறைநிரப்பு உணவுகள் மூலம் வழங்கப்படுகின்றது. இக்குறை நிரப்பு உணவானது திண்ம அல்லது திரவ அல்லது கவல நிலையில் இருத்தல் அவசியமாகும். அத்தோடு குறைநிரப்பு உணவின் அளவுகளையும் படிப்படியாக அதிகரித்து வெவேறு உணவுகளை அறிமுகம் செய்தலும் வேண்டும்.
ஏழாவது மாதத்தின் பின் குழந்தைகளுக்கு காய்கறி, விலங்குணவு, தானியங்கள் மற்றும் பழ வகைகளையும் வழங்க வேண்டும். காய்கறிகளாக கீரை வகைகளையும் பொன்னாங்கண்ணி, வல்லாரை, கரட் போன்றவற்றையும் விலங்குணவுகளாக பால், தயிர், முட்டை, மீன் போன்றவற்றையும் தானியகளாக பயறு,கெளபி, நிலக்கடலை போன்றவற்றையும் வாழைப்பழம், பப்பாளிப்பழம், கொய்யா, ஆரஞ்சு, அப்பிள் போன்ற பழவகைகளையும் வழங்கலாம். வெஜ் உணவுகள் மட்டும் உண்ணும் குடும்பத்தினர் தானியங்களை முளைக்க வைத்து சமைத்து கொடுத்தல், பச்சை நிற காய்கறிக்காய் உணவுடன் சேர் து கொள்ளல், ஜீரண தொழிட்பாட்டிட்கு எழுமிச்சம் சாறு போன்றவற்றை கொடுத்தல் வேண்டும். மேலும் ப்ரோட்டீன், விட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து அதிகமுள்ள பழ வகைகளையும் கொடுத்தல் வேண்டும். ஏனெனில் இவை விலங்குணவுகளில் அதிகமாக காணப்படுவதோடு இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆறாம் மாதத்தின் பின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற உணவுகள் நன்றாக நசுக்கிய அல்லது கடைந்த உணவுகளாக காணப்பட வேண்டும். இக்கடைந்த உணவுகள் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் வழங்க வேண்டும்.
முதல் ஒன்பது தொடக்கம் பதினோரு மாதங்கள் குழந்தைக்கு கையால் பிடித்து உண்ணக்கூடிய வகையில் சிறு துண்டுகளாக நொறுக்கிய உணவுகளை வழங்குதல் வேண்டும். இதன் மூலம் குழந்தையை சாதாரண உணவுப் பழக்க வழக்கத்திட்கு பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வயது பிள்ளைகளுக்கு உணவானது மூன்று தொடக்கம் நான்கு தடவை நாளொன்றுக்கு வழங்க வேண்டும். பின்னர் மசித்த சாதாரண உணவுகளை ஒரு வருட பூர்த்தியின் பின் வழங்கலாம். இவையும் மூன்று தொடக்கம் நான்கு தடவைகள் வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு சாதாரண உணவுகளை உட்க்கொள்ளப்பழக்கும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
- குழந்தைகள் உணவு உன்பதட்கு சௌகரியமான இடத்தை தெரிவு செய்தல் வேண்டும். இது குழந்தைகள் உணவு உன்பதட்கு எவ்வித தடங்கல்களையும் ஏட்படுத்த கூடாது.
- குழந்தைகளை உணவு உண்ண கட்டாயப்படுத்த கூடாது உரிய நேரத்தில் மாத்திரம் உணவூட்டுதல் வேண்டும். இதனால் குழந்தை பசியை உணர சுலபமாக இருக்கும்.
- குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளை இனம்கண்டு அவற்றை தயார் செய்து கொடுத்தல் வேண்டும்.
- குழந்தைகள் உணவு உண்ணும் வேளைகளில் குழந்தைகளை பாராட்டி சந்தோசமான மன நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு வெவேறு சுவைகளில் உணவுகளை தயார் செய்து கொடுத்தல்.
- மிக முக்கியமாக பொறுமையை கையாளுதல்.
விசேடமாக குழந்தை நோயுற்றிருக்கும் வேளைகளில் மிகவும் பொறுமையை கையாள வேண்டும். அதாவது போசாக்கான உணவுகளை சிறிது சிறிதாக அடிக்கடி வழங்க வேண்டும். நோயுற்ற வேளைகளில் பொறுமையுடன் மேலதிக தாய்ப்பால் மேலதிக உணவுகளை ஊட்டுதல் வேண்டும்.
இவை அனைத்துக்கும் முக்கியமாக, குழந்தையின் வயத்துக்கேட்ப வளர்ச்சியானது சரியான வேகத்தில் செல்கின்றதா என உறுதிப்படுத்தி கொள்ளல் முக்கியமான ஒன்றாகும். இது போசனைக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அதட்க்குரிய நடவடிக்கைகளை மேட்கொள்ள உதவியாக இருக்கும். இதனை அடையாளம் காண போடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் அட்டவணையை பயன்படுத்தலாம். இப்படிக்கு குழந்தையின் கிலோகிராம் நிறையை மீட்டர் வர்க்க துயரத்தால் பிரிக்கும் போது வரும் சுட்டியை வளர்ச்சி அட்டவணையில் ஒப்பிட்டு பார்த்து, குழந்தை நிறைக்கு ஏற்ற உயரத்தை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்ககாள்ள வேண்டும். அதிக பருமன் கொண்ட குழந்தைகளையும் மெலிந்த குழந்தைகளையும் உரிய நிறைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இப்பரிசோதனையானது ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வருடங்களுக்கு மேட்கொள்ள வேண்டும். பின்னர் மூன்று மாதங்களிட்க்கு ஒருதடவை 5 வயதை அடையும் வரை செய்ய வேண்டும்.
இதன் மூலமே நமது குழந்தைகளை ஆரோக்கியமான சுறுசுறுப்பான புத்திசாலியான குழந்தைகளாக திகழசெய்ய முடியும்.
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக