இயறகையின் கொடைகளுள் நீரானது முக்கியமான ஒரு வளமாகும். பூமியில் உயிரின பல்லின தன்மை நிலைத்தலுக்கும் உயிர் வாழ்தலுக்கும் இன்றியமையாததாகவே காணப்படுகிறது. இந்நீரானது மனிதனின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய சேவையாற்றுகிறது. அதாவது உலகின் நாகரீகங்கள் நீர் நிலைகளை ஆதாரமாக கொண்டே அபிவிருத்தி அடைந்துள்ளது என்பது வரலாறு ரீதியாக நிரூபிக்கக்கூடியதாக உள்ளது.
இப்பூக்கோலத்தின் மொத்த பரப்பளவில் எழுபது சதவீதம் நீராகும். இதில் 97.3 வீதம் கடல் நீராகும். எஞ்சிய 2.7 வீதமான நீரே நிலத்தடிநீராக காணப்படுவதுடன் இதில் கழிவு நீர், பனிப்பாறை போன்றன நீங்க மிக சொற்பமான நீர் தான் பருகுவதட்கு உகந்ததாக காணப்படுகின்றது.
கைத்தொழில் மயமாக்கம், குடித்தொகை பெருக்கம் என்பன நீரின் தேவையை அதிகரிக்கின்ற அதே சமயம் நீர் மாசடைவதன் காரணமாக ஏட்படும் தொற்று நோயால் இறப்புவீதமும் அதிகரிக்கின்றது. இவை மிகஅதிகமாக ஆசிய நாடுகளிலேயே காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையானது ௧௯௯௨ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்நீர் வளத்தை பாதுகாப்பதட்காக மார்ச் 22ம் திகதி உலக நீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளுடன் செயது திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. சில வருடர்ந்த கருப்பொருள்கள் பின்வருமாறு.
- 2014 – Water and Energy
- 2015 – Water and Sustainable Development
- 2016 – Better Water, Better Jobs
- 2017 – Why Waste Water?
- 2018 – Nature for Water
- 2019 – Leaving No One Behind
- 2020 – Water and Climate Change
- 2021 – Valuing Water
- 2022 – Groundwater, Making the Invisible Visible
இதன் காரணமாக உலகின் அதிகப்படியான மக்கள் சுத்தமான குடிநீரையும் அடிப்படை
கழிவகற்றல் வசதியினையும் வருட வருடம் பெற்று வருகின்றனர்.
நீரை மாசுபடுத்தும் காரணிகளாக திண்ம, திரவ, உயிர்கழிவுகள் காணப்படுகின்றன.
அதிலும் முக்கியமாக விலங்குக் கழிவுகள் அதாவது இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கழிவுகள் முக்கியமான நீர் மாசாக்கிகளாகும். இவை நோயினை ஏட்படுத்த கூடிய ஒட்டுண்ணிகள், வைரஸ், பாக்டீரியா மற்றும் தனிக்கல அங்கிகள் போன்றவற்றை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவையே அந்நீரினை பருகுவோர்க்கு நோய்களை உண்டாக்குகின்றது.
பின்தங்கிய நாடுகளில் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் இவ்வகையான நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதிலும் ஒவ்வாரு நாளும் நான்காயிரத்துக்கும் மேட்பட்ட குழந்தைகள் வயிற்றோட்டம் போன்ற நீர் மாசடைவாள் எட்டப்படும் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்கு ஆசிய நாடுகளிலே ஏட்படுகின்றன. மேலும் இவ்வகை நோய்களே சிறுவர்களுக்கு நீண்ட கால போசாக்கின்மையை ஏட்படுத்துகின்றன.
நீர் சுத்திகரிப்பு முறை
நுகர்விட்காக பயன்படுத்தப்படும் நீரானது பின்வரும் படிமுறைகளினூடாக சுத்திகரிக்கப்படுகின்றது.
- அடையவிடுதல்
- வடித்தல்
- தொற்று நீக்கல்
அடையவிடுதல்
நீரானது தான் கடந்து வருகின்ற பிரதேசங்களிலுள்ள திண்ம மூலக்கூறுகளை தொங்கல்களாக தன்னகத்தே வைத்து கொள்கின்றது. இவற்றினை பெரியதோ அல்லது சிறியதோ நீர் தாங்கிகளில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு சேமித்து வைப்பதனையே
அடையவிடுதல் என்பர். இவ்வடையவிடுதலின் போது நீரினுள் காணப்படும் தொங்கல்கள் புவியின் ஈர்ப்பு விசை காரணமாக தாங்கிகளின் அடிப்பகுதிகளில் படிகின்றன. இச்செயன்முறையை துரிதப்படுத்த alum போன்ற ஊக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.இதன் போது நீரினுள் காணப்படும் தொங்கல் கூறுகள் பல ஒன்றாக இணைவதன் மூலம் நிறையானது அதிகரித்து படித்தலானது விரைவு படுத்தப்படுகின்றது.
வடித்தல்
இவ்வாறு நீரை மாசுபடுத்துகின்ற மாசுக்கள் உயிரியல், இரசாயன, மற்றும் பௌதீக நுண் துளை வடியினாலும் நீக்கப்படுகின்றது. மாசு படுத்துகின்ற துணிக்கைகள் மற்றும் சேதன பொருட்கள் இதன் மூலம் பிரிகையடைய செயய்யப்படுகின்றன.
தொற்றுநீக்கல்
மேட்குறிப்பிட்ட முறைகளினூடாக நுண்துகள்கள் பிரிகையாக்கப்பட்ட நீரானது தீங்கு விளைவிக்கின்ற நுண்ணங்கிகளை அழிப்பதட்கு குளோரின் மற்றும் புற ஊதாக்
கதிர்வீச்சு போன்றன பயன்படுத்தப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்படுகின்றது.
சாதாரணமாக வீட்டுப்பாவனைக்காக நீர் சுத்தீகரிப்பதட்கு பல்வேறு பட்ட நீர் வடிக்கும் முறைகள் காணப்படுகின்றன. இதட்காக மணல், கற்கள், பரல்கள், கரி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் அதிக நன்மைகள் காணப்படினும் சில தீமைகளும் காணப்படுகின்றன. பொதுவாக விட்டு பாவனைக்காக நீர் சுத்தி கரிப்பு முறையினை இரண்டாக பிரிக்கலாம்.
- விரைவான மணல்வடி முறை
- மந்தமான மணல்வடிமுறை
மந்தமான மணல் வழிமுறை
இது ஒரு மையப்படுத்தப்பட்ட நீர் சுத்திகரிப்பு முறையாகும். நன்கு பராமரிக்கப்பட்ட மந்த மணல் வடிமுறையின் மூலம் அசுத்தமான தொங்கல்கள் கொண்ட நீரினை தெளிந்த மற்றும் கிருமித்தொற்று நீராக சுத்திகரிக்க முடியும். ஆனால் பராமரிப்பானது அதிகமாக தேவைப்படக்கூடியதாக காணப்படுகிறது. மேலும் பார்க்க..
மேலே குறிப்பிட்ட மந்த மணல் வடி சுத்திகரிப்பு முறையை தழுவி அதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு வீட்டு பாவனைக்கு ஏற்ற வகையில் உயிர் மணல் வடி என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை CAWST என்ற நிறுவனம் 2009 ம் ஆண்டு அறிமுகம் செய்தனர். உயிர் மணல் வடியானது இலகுவாக நமக்கு கிடைக்க கூடிய மூலப்பொருட்களை கொண்டே முற்று முழுதாக உருவாக்கப்பட்டுள்ளதால் மிக்க குறைந்த மூலதனதுடன் சாதாரண மக்களாலும் கூட மிக இலகுவாக தயாரிக்க கூடிய வகையில் காணப்படுகிறது. இதனை எவ்வாறு தயார் செய்வது தொடர்பில் CAWST நிறுவனமானது பல பயிட்சி பட்டறைகளை நிகழ்த்தி வருவதுடன் அதட்கான செய்முறை விளக்கத்தையும் இணையதளத்தில் கூட பெற்று கொள்ளலாம். பயிட்சிகள் பெறுவதட்கு..
உயிர் மணல்வடி குறுக்கு வெட்டு முக தோற்றம் :
இது சாதாரணமாக பிளாஸ்டிக் அல்லது கான்கிரீட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு கொள்கலன்கள் உருவாக்கப்படுகின்றது. இதன் உயரமானது 0.9 மீட்டர் ஆகவும் அகலமானது 0.3 சதுர மீட்டராகும். இக் கொள்கலனானது வடிக்கப்பட்டு கழுவப்பட்ட மணல் மற்றும் சரளைக்கற்களை கொண்டது. இதுவே அசுத்த நீரை வடிகட்டும் ஊடகமாகும். இதன் மேல் பகுதியில் 5 சென்ட்ரி மீட்டருக்கு நீர் படையும் காணப்படுகின்றது. இம்மேல் பகுதியில் காணப்படும் நீரானது, சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேறும் குழாயின் மட்டத்தில் காணப்படுவதால் தேவையான சுத்திகரித்த நீரினை வெளியேற்ற உதவுவதோடு உயிரியட் படையினை உருவாக்கவும் உதவுகிறது. அதாவது உயிரியல் படையில் உள்ள நுண்ணங்கிகளுக்கான ஆக்ஸிஜனை பெற்று கொடுக்கிறது. இதன் மூலம் சுத்திகரிப்பானது மேம்படுகிறது.
இதனுடைய தொழிற்ப்பாட்டினை எடுத்து நோக்கில், கொள்கலனின் மேட்பகுதியினூடாக ஊற்றப்படும் நீரானது மணல் மற்றும் சரளைக்கற்களுடாக மெதுமெதுவாக புவி ஈர்ப்பு விசை காரணமாக கீழிறங்கி சுத்திகரிக்கப்பட்ட நீராக வெளியேறு கின்றது. இதனை குடிப்பதட்கு உகந்த பாத்திரத்தினுள் சேகரிக்கப்படுகின்றது. இங்கு உயிரியல் மற்றும் பௌதீகவியல் செயன்முறை காரணமாக நோய்க்கிருமிகள் மற்றும் தொங்கல் நிலையில் காணப்படும் திடப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. இவை அதிகமாக உயிரியல் மற்றும் நுண் மணல் பாதியிலேயே இடம்பெறுகிறது.
இதனுடைய பராமரிப்பு நடவடிக்கையானது நமது பாவனையையும் நீரின் தன்மையையும் பொறுத்தே மேட்கொள்ளப்படுகிறது. அதாவது ஆரம்பகாலங்களை விட பிந்திய காலங்களில் நீரானது வெளியேறும் அளவானது குறைந்து கொண்டே செல்லும். அதாவது நீரினுள் காணப்படுகின்ற திடப்பொருட்கள் அதன் படிகளில் படிந்து இருகுவதால் நீரின் ஓட்டமானது குறைவடைகிறது.
இதனை பராமரிப்பதட்கு நீர் படையின் நிறம் மாறும் அளவிட்கு, அதன் கீழ் காணப்படும் நுண் மணல் படையானது நன்கு கிளற விடப்பட்டு மேல் நீரானது அகற்றப்படுதல் வேண்டும். இது நீர்ப்படையின் நிறமானது சாதாரண நிறமாகும் வரை மேட்கொள்ளப்படுத்தல் வேண்டும்.
மேலும் இதன் மேல் காணப்படும் உயிர் படையானது இதன் போது அழிக்கப்படுவதால் இது மீண்டும் உருவாக 20 தொடக்கம் 30 நாட்கள் வரையான காலப்பகுதியை எடுத்து கொள்ளும். மேலும் இதனுள் குளோரின் போன்ற பொருட்கள் இடுவதால் இதன் மேட்படையில் காணப்படும் உயிர் படையானது அழிந்து விடுகிறது. இதனால் நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலானது குறைவடைகிறது.
இவ்வுயர் தொழிநுடட்ப உயிரியல் மணல் வடியானது பயிற்றுவிக்கப்பட்ட தொழிநுடட்ப வல்லுநர்களால் கட்டமைக்கப்படுத்தல் வேண்டும். இல்லையேல் சுத்திகரிப்பில் குறைபாடுகள் ஏட்பட்டு நோய்கள் உருவாக வாய்ப்புகள் அதிகமாகும். உயிர் மணல் வடி தொழிநுடட்ப வல்லுநர் பயிற்சி கட்கை நெறிக்கு. CLICK HERE
.png)
.png)
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக