நமது உடலானது எலும்பு, தசை, இரத்தம் போன்றவற்றால் உருவானது எனலாம். இவ்வுடலினுள் உள்ள உடட்கூறுகள் நரம்பு, நாளங்களால் சம்பந்தப் படுகின்றன. இந்நரம்போடு சம்பந்தப்பட்ட பல்வேறுபிரச்சினைகளும் காணப்படுகின்றன. அவற்றில் நரம்புத்தளர்ச்சி, நரம்புப் பலவீனம், நரம்புப் பிடிப்பு, நரம்பு இழுப்பு, நரம்புச்சுளுக்கு என்பன குறிப்பிடத்தக்கன.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
- மாம்பழச்சாற்றுடன் தேன் கலந்து உண்டு வாருங்கள். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
- பசும் பாலில் சிறிது குங்குமப்பூவைக் கலந்து தினந்தோறும் இரவு படுக்கைக்கு முன் பருகவும்.
- முருங்கை இலைகள், காய்களை உண்ணுங்கள். முருங்கைப்பூக்கள், ஈர்க்குகளை இரசம் வைத்து குடித்து வரவும்.
- பசும் பாலில் அதிமதுரத்தூள் போட்டு காய்ச்சி இரவில் படுக்கும் முன் பருகி அவ்வாறு செய்தால் நரம்புத் தளர்ச்சியும் உஷ்ணத்தால் ஏற்படும் இருமலும் நீங்கும்.
- விளாம்பிசினைப் பசும் பாலில் ஊற வைத்து சிறிது சீனி கலந்து நெல்லிக்காய் அளவு உண்டு வரவும் உடல் பலமடையும். களைப்பும் நீங்கும், இரத்த ஓட்டமும் சீரடையும்.
- மாம்பழம், திராட்சைப்பழம், வாழைப் பழம், தேன், பனங்கற்கண்டு என்பன ஒன்றாகக் கலந்து சாப்பிட்டு வரவும்.
- கசகசா, பாதாம், பிஸ்தா, சாரைப் பருப்பு என்பனவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து இளசூடான பசும் பாலில் கலந்து காலையில் குடித்து வரவும்.
- கருவேலன் பிசினை உலர்த்தி, பனங் கடக்கண்டு சேர்த்து வேப்பிலைகளை நீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தக் கசாயத்தை ஒரு வாரம் குடித்து வரவும். நரம்புத். தளர்ச்சியும் நீங்கும் மன நிலையும் சீராகும்.
- பவள மல்லிப் பூக்களின் மணத்தை சுவாசிக்கவும் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
நரம்புகள் பலமடைய....
- தேன், சுண்டைக்காய், பாகற்காய், சூதழக்காய், முருங்கைக்காய், அகத்தி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கசப்புச் சுவை உள்ளவற்றை உணவில் உட்கொண்டு வரவும்.
- கடுக்காய் தூளை பாலுடன் கலந்து உண்டு வரவும்.
- மாம்பழச்சாற்றுடன் தேனைக் கலந்து உண்டு வந்தால் நரம்புகள். பலமடையும்.
நரம்பு இழுப்பு குணமடைய...
- மருதாணி இலைகளுடன் படிகாரம் சேர்த்து அரைத்து பூசி வரவும். இழுபட்ட நரம்பு பழைய நிலையை அடையும்.
நரம்பும் பிடிப்பு குணமாக...
- வெள்ளைப் பூண்டை உணவுடன் சமைத்து நன்கு உண்டு வரவும்.
- எலுமிச்சம் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் என்பவற்றை வகைக்கு 200 மில்லி அளவு சேர்த்து அதில் துணியை நனைத்துக் கட்டி வர சுகம்.காணலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக