பிணிகள் அகல உதவும் பிராணாயாமம்

 

பிராணாயாமம்

மனிதனின் சுவாசமானது கருவுலகில் இருந்து இப்பூமிக்கு வெளிவந்த சமயத்தில் தொப்புள்கொடி அறுந்தவுடன்‌ உண்டாகும் அழுகையின் மூலம் ஆரம்பமாவதுடன் இறக்கும் வரை நின்றுவிடாமல் நடைபெறுகின்றது. பின் இறந்தவுடன் காற்‌றோடு வெளியேறிவிடுகிறது. இதுதான்‌ சுவாசத்தின்‌ சிறப்பு.

அண்டத்‌தில்‌ உள்ளது பிண்டத்தில்‌ என்ற வாக்கியத்தின் படி அண்டசராசரங்களிலுள்ள அனைத்துவிதமான சக்திகளும்‌, மனித உடலில் உள்ளன. அவைகள்தான்‌ பஞ்ச பூதங்களான காற்று, நீர்‌, நிலம்‌, நெருப்பு, ஆகாயம்‌ என்‌பன. இவற்றுள் முதன்மையானதாக இருப்பது காற்றுதான்‌.

இக்காற்றை நாம்‌ சுவாசிப்பதன் காரணமாக உணர்ந்து கொள்ள முடிகிறது எனலாம். மிகுதியுள்ள நான்கு பூதங்களும்‌ காற்றினூடாக உடலினுள்‌ சென்று நம்மை வாழ வைக்கின்றன. இவ்வைந்து பூதங்களும் முறையாக செயல்படுவதன் மூலமே மனிதனாகிய நாம் வாழ் நாள் முழுவதும்‌ நோயின்றி  வாழ முடியும்.

நமது உடலினுள் காற்றினூடாக செல்லும் பிராண சக்தி நம் உடலினுள் உள்ள எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளினுள் சென்று நம்மை வாழ் வைக்கின்றது.இவற்றுள் இடகலை, பின்கலை, சுழிமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலமே சுய + வாசம் நடைபெற்று நம்மை வாழ் வைக்கின்றது. இங்கு வாசம் என்றால் ஜீவித்தல் என்றும் சுய என்றால் சுயமாகவே என்றும் பொருள் படும். இதனால் தான் நாம் ஜீவிப்பதட்கு சுயமாக செய்கின்ற கருமம் தான் இந்த சுவாசம் ஆகும்.

 நாடி என்று அழைப்பது உதிரத்தை கொண்டு செல்லும் நாடியல்ல. இதட்க்கு தமிழில் உயிர் , தூது என்றும் அழைப்பர். இவை கண்களின் பார்வைக்கு அப்பால் பட்டது. நாம் மேட்குறிப்பிட்ட இடகலை, பின்கலை, சுழிமுனை ஆகிய மூன்று நாடிகளையும் முறையே சந்திரநாடி, சூரியநாடி, சுழிமுனை நாடி என்றும் அழைப்பர். சுழிமுனை: தலை முதல் மூலாதாரம் வரை முள்ளந்தண்டினுள் ஓடுவது. பின்கலை:வலது மூக்கு துவாரம் முதலாக இடது கால் பெரு விரல் வரை பெருக்கல் குறி போல் (X ) குறுக்கிட்டு ஓடுவது.
இடைகலை: இடது மூக்கு துவாரம் முதலாக வலது கால் பெருவிரல் வரை குறுக்கிட்டு ஓடுவது.

சாதாரணமாக சுவாசமானது நமது இரு நாசி துவாரங்கள் வழியாக ஒரே கணத்தில் நடைபெறுவது என்பது தவறு. மூச்சுக்காற்றானது காற்றை உள்ளிழுப்பதட்கு ஒரு துயரத்தையும் அதே சமயம் வெளிவிடுவதட்கு மற்றைய துவாரத்தையும் பயன்படுத்துகின்றது. இவை எப்போதும் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறியே செயல்படுகின்றது. இதனையே சித்தர்கள் பின்கலை, இடைகலை என பகுத்துள்ளனர்.   இங்கு பிங்கலை அல்லது சூரியகலை என்பது வலது மூக்கினால் சுவாசிப்பதையும்,  இடைகலை அல்லது சந்திர கலை என்பது இடது மூக்கினால் சுவாசிப்பதையும் குறிப்பிடுகின்றனர். அதே கணம் இரண்டு மூக்கு துவாரத்தினாலும் ஒரே சமயத்தில் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை சுழிமுனை என்றும் குறிப்பிடுகின்றனர். யோகிகளின் நிலை இதுவாகும். சந்திரநாடி, சூரியநாடி, சுழிமுனை நாடி  ஆகிய நாடிகள் மூன்றும்  தண்டு வடதினூடாக செல்கின்றன. இதன் காரணமாகவே பிராணாயாமம் செய்யும் போது  முள்ளந்தண்டு வடமானது நேராக அமையுமாறு இருந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இப்பயிச்சியின் போது இம்முள்ளந்தண்டு வட்டத்தினுள் உள்ள  ஆதார சக்கரங்கள் எழுப்பப்படுகின்றன. தொடரும்..


கருத்துகள்