தாழ் சர்க்கரை நிலை
இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் என நினைக்க வேண்டாம். அதேவேளை, குறைந்தாலும் பிரச்சனைதான். இதனை தாழ் சர்க்கரை நிலை என்றும் அழைப்பர். இதயத் துடிப்பு அதிகரித்தால். நெஞ்சு படபடப்பு, அதிகரித்த பசி, வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை போன்ற சில அறிகுறிகள் இந்த நிலையைக் குறிக்கலாம். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளது என்று அர்த்தம். இச்சிக்கலைத் தீர்க்க, உடல் எடையை மிதமான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம்.
விரல் சூப்பும் பழக்கம்
அளவுக்கு அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்தைகளின் விரல்களில் புண்கள் தோன்றும். இந்த பழக்கம் நான்கு வயதிற்கு மேல் தொடர்ந்தால், அது பற்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சில குழந்தைகளுக்கு அவர்கள் வளரும்போது, அவர்களின் மன நிலையையும் பாதிக்கிறது. விரல் சூப்பும் பழக்கத்தை உடைய குழந்தைகளுக்கு குடல் வாழ் புண்கள் கூட ஏற்படலாம்.நீருக்கு நிகரான பழங்கள்
நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் குடிப்பது நமக்கு அவசியமோ அதேபோல், எங்கள் உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பதும் மிகவும் முக்கியமானது. இவற்றில் உள்ள நீரானது நமது உடலில் உள்ள நீரின் அளவை பேணி பாதுகாப்பதோடு இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனியுப்புகள் எமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் இளமையையும் தருகிறது. தக்காளிச்சாரனது எமது உடலின் அணைத்து கலங்களுக்கும் நீரினை கிடைக்க செய்வதன் மூலம் தாக்கத்தை உடனடியாக தணிக்கிறது. ஆகவே நாம் ஆரோக்கியத்தையும் இளமையையும் பேணுவதட்கு நன்கு நீர் அருந்துவது மட்டுமன்றி பழங்களையும் நன்கு உண்ண வேண்டும்.வெங்காயம்
இரத்த ஓட்டம் சீராக அமைய தினமும் காலையில் வெங்காயத்தை சாப்பிட்டு வருத்தல் வேண்டும்.இதயம் சம்பந்தமான நோய்கள் குறைவடைவதோடு ஒஸ்டியோ பொரோஷிஷுக்கு அருமருந்தாகும். மேலும் வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சையாக உண்டு வர வாய்ப்புண் குணமடையும். புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் இதன் சாற்றினை அரை டேபிள் ஸ்பூன் அளவு தினமும் எடுத்துவர நுரைஈரல் பலமடையும்.
உடல் நடுக்கம்
தன்னிச்சையின்றி சுயாதீனமாக உடல் உறுப்புகள் நடுங்குவதனையே இங்கு குறிப்பிடலாம். இவை உடல் பலவீனத்தால் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனை ட்ரெமோர்ஸ் என்பார்கள். இதட்கு தேனுடன் திராட்சை சாற்றை கலந்து உணவிட்கு பிறகு உண்டு வர வேண்டும். சில நாட்களில் நடுக்கம் நிட்கும். இதையும் படிக்க..
நாடா புழுக்கள்
இந்நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி, நன்கு வேக வைக்கப்படாத உணவு மற்றும் அசுத்தமான குடி நீர் போன்றவற்றால் தொற்றுகின்றது.பப்பாளி காய் சாறு, இளஞ்சூடான நீர், தேன் என்பவற்றை 1:4:1 என்ற அளவில் கலந்து வெறும் வயிற்றில் பருகிவர சுகமடையும். பப்பாளி காய் சாற்றுக்கு பதிலாக பாகற்காய் சாற்றையும் பயன்படுத்தலாம்.இதனை தொடர்ச்சியாக 03 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்கு பயன்படுத்தலாம். தமது அன்றாட உணவுகளுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்துவருதல் நல்லது.
சோயா
9 அமினோ ஆசிட்களை உள்ளடக்கிய அதிகளவிலான புரோட்டீன், வைட்டமின் பி, குறைந்தளவில் கொழுப்பு, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்சத்து, கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் போன்றன காணப்படுகின்றன. இவற்றை சிறார்களுக்கான சத்துணவாகவும் கொடுக்கலாம். அதிகளவான ப்ரோட்டீன் உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு குறைந்தளவான கொழுப்பின் காரணமாக இருதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.மேலும் இதன் மூலம் ஊதுபத்தி செய்யப்படும் பால் மருத்துவ குணங்கள் நிறைந்ததோடு பால் பானங்களுக்கு சிறந்த மாற்றாகவும் காணப்படுகிறது. இதில் காணப்படும் கந்தகம் நமது இளமையை பேணா உதவுகிறது.
காச நோய் மற்றும் ஆஸ்துமா
காசநோய் மற்றும் ஆஸ்துமா னாய் உள்ளவர்கள், தக்காளி சாறு, தேன், ஏலக்காய்தூள் போன்றவற்றை கலந்து தினமும் இரவு தூக்கத்துக்கு முன் சாப்பிட்டு வர இந்நோய்கள் குணமடையும்.
பீர்க்கங்காய்
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண் உள்ளவர்கள் பீர்க்கங்காயாயை தமது உணவோடு சமைத்து சாப்பிட்டு வர குணமடையும். அத்தோடு பீர்க்கங்காய் இலைகளை அரைத்து அதன் சாற்றினைப் புண்கள் உள்ள இடத்தில் தடவிவர அல்லது அரைத்த இலைகளை கட்டி வர சொறி, சிரங்கு, புண்கள் ஆறிவிடும். இதில் காணப்படும் விட்டமின்கள் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தொற்று நோய்களில் இருந்து எம்மை பாதுகாக்கவும் செய்கின்றது. மஞ்சள் காமாலை நோய்க்கு இதன் சாறானது பயன்படுத்தப்படுவதோடு நீரிழிவு நோய்க்கு இதன் இலைச்சரானது உபயோகமுள்ளதாக காணப்படுகின்றது.
.png)
கருத்துகள்
கருத்துரையிடுக